சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 42,000 ரூபாயை நெருங்கி வருகிறது. இதேபோல் வெள்ளியும் கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
அண்மை காலமாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதும், பங்குப்பத்திரங்களுக்கு பதிலாக தங்கத்தின் மீதான முதலீடு திரும்பியதுமே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று(ஜனவரி 2) ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,150ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.
இந்தநிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 328 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 41 உயர்ந்து ரூ. 5, 191க்கும், சவரன் ரூ. 41,528க்கும் விற்பனையாகிறது. விரைவில் தங்கம் விலை ரூ. 42,000 ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 75,500 ஆகவு உள்ளது.புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
டெல்லி இளம்பெண் விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!