தொடர்ந்து குறையும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று (ஆகஸ்ட் 18) சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில் ,மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது
சென்னையில் நேற்று(ஆகஸ்ட் 17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கும், கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.4,849-க்கும் விற்பனையானது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.11 குறைந்து, ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.62.40 ஆகவும், ஒரு கிலோ 62,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.39,120க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தங்கம் விலை வீழ்ச்சி! இன்றைய விலை நிலவரம்!