தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றம் கண்டு வருகிறது. கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, அதன் பிறகு ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் குறைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் கொண்ட ஒருகிராம் 5,456 ரூபாய்க்கும், ஒரு சவரன் 43,648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 5,952 ரூபாய்க்கும், ஒரு சவரன் 47,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 0.50 காசுகள் குறைந்து ஒரு கிலோ ரூ.75,700க்கு விற்பனையாகிறது.
பிரியா
குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர்: அரசு அதிரடி உத்தரவு!
முரசொலி மாறன் பிறந்தநாள் : முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!