தங்கம் விலை இன்று (ஜனவரி 28) சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் தற்போது 60 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி 19ஆம் தேதி ஒரு கிராம் 7,435 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி 7,525ஆக ஒரு கிராம் விலை உயர்ந்து ஒரு சவரன் 60,200க்கு விற்பனையானது. இந்த விலை மேலும் அதிகரித்து கடந்த ஜனவரி 6ஆம் தேதி, 60,440க்கு விற்பனையானது.
இந்த விலையில் இருந்து நேற்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில் இன்று 240 ரூபாய் குறைந்ததுள்ளது.
அந்தவகையில் 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கம் இன்று, 60,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து, ரூ.7,510க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.