தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் இன்று (நவம்பர் 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வைச் சந்தித்து வருகிறது. நேற்று (நவம்பர் 9) 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 38,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ. 40 விலை உயர்ந்து ரூ. 38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 விலை உயர்ந்து ரூ. 4,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் நேற்று ஒரு சவரன் ரூ. 42,024-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து இன்று ரூ. 40 விலை உயர்ந்து ரூ. 42,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 விலை உயர்ந்து ரூ. 5,258-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 6 விலை குறைந்து ரூ. 61.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 6,000 விலை குறைந்து ரூ. 61,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

‘வாத்தி’க்கு மாறாக ‘டிஎஸ்பி’!

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *