சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 26) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று 2வது நாளாக இறங்கு முகமாக உள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.48,040-க்கும் ஒரு கிராம் ரூ.17 குறைந்து ரூ.6,005-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,400 குறைந்து ரூ.77,600-க்கும் ஒரு கிராம் ரூ.1.40 குறைந்து ரூ.77.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி!
பரவும் டெங்கு… 1000 இடங்களில் சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சு அறிவிப்பு!