தங்கம் விலையில் மாற்றம்: இன்றைய நிலவரம்!
சென்னையில் இன்று (அக்டோபர் 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 38,440 க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு வாரமாக விலை ஏற்றத்தைச் சந்தித்து வந்த தங்கம் இன்று (அக்டோபர் 10) குறைந்துள்ளது. நேற்று (அக்டோபர் 9) தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 38,720 க்கு விற்பனையானது.
இந்த விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டு சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 38,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 35 குறைந்து ரூ. 4,805 க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு வாரத்தில் 22 கேரட் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் (10 கிராம்)
கடந்த அக்டோபர் 3 அன்று ரூ. 150 அதிகரித்து ரூ. 47,050க்கு விற்பனையானது
அக்டோபர் 4 அன்று ரூ. 700 அதிகரித்து ரூ. 47,750-க்கு விற்பனையானது
அக்டோபர் 5 அன்று ரூ. 600 அதிகரித்து ரூ. 48,350-க்கு விற்பனையானது
அக்டோபர் 6 அன்று ரூ. 50 அதிகரித்து ரூ. 48,400-க்கு விற்பனையானது
அக்டோபர் 7 அன்று ரூ. 50 குறைந்து ரூ. 48,350-க்கு விற்பனையானது
அக்டோபர் 8 அன்று ரூ. 50 அதிகரித்து 48,400-க்கு விற்பனையானது
அக்டோபர் 9 அன்று எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 48,400க்கு விற்பனையானது
அக்டோபர் 10 ஆம் தேதியான இன்று ரூ. 350 குறைந்து 48,050-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
நேற்று ஒரு சவரன் வெள்ளி ரூ.528-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9.60 குறைந்து ரூ. 518.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.20 குறைந்து ரூ. 64.80-க்கு விற்பனையாகிறது.
மோனிஷா
இந்திய சினிமாவின் ‘பாகுபலி’ ராஜமௌலின் கதை!
இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க. ஸ்டாலின்