சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 19) ஒரு சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூ.46,4௦0-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 உயர்ந்து ரூ.5,8௦0-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் விலையும் சவரனுக்கு ரூபாய் 176 உயர்ந்து ரூ.50,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 22 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6327-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.50 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் பெரிதாக மாற்றமில்லை. ஆனால் நாளுக்குநாள் தங்கம் உயர்ந்து கொண்டே செல்வது நகை வாங்குபவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும் நாட்களில் விலை குறையுமா? இல்லை போகப்போக அதிகரிக்குமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024-25 தமிழ்நாடு பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்!
’எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?’ : கமல்ஹாசன் பதில்!