39 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

Published On:

| By Monisha

சென்னையில் இன்று (நவம்பர் 9) சவரனுக்கு ரூ. 456 விலை உயர்ந்து ரூ. 38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று (நவம்பர் 8) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 38,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து இன்று சவரனுக்கு ரூ. 456 விலை உயர்ந்து ரூ. 38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 57 விலை உயர்ந்து ரூ. 4,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ. 41,520-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 504 விலை உயர்ந்து ரூ. 42,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 63 விலை உயர்ந்து ரூ. 5,253-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ரூ. 67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 700 விலை உயர்ந்து ரூ. 67,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் மாத விலை நிலவரம்

நவம்பர் மாத தொடக்கத்தில் (நவம்பர் 1) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 37,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 2 : ரூ. 88 விலை உயர்ந்து ரூ. 37,928-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 3 : ரூ. 208 விலை குறைந்து ரூ. 37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 4 : ரூ. 16 விலை உயர்ந்து ரூ. 37,736-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 5 : ரூ. 424 விலை உயர்ந்து ரூ. 38,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 6 : விலையில் மாற்றமில்லாமல் ரூ. 38,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 7 : ரூ. 40 விலை உயர்ந்து ரூ. 38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவம்பர் 8 : ரூ. 456 விலை உயர்ந்து ரூ. 38,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மோனிஷா

நெருங்கும் தேர்தல்: பணம் திரட்ட பாஜக போட்ட புது உத்தரவு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share