சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 3௦) ரூபாய் 160 குறைந்து ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 குறைந்து ரூ.6,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூபாய் 55,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 22 குறைந்து ரூ.6,949-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 20 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,௦௦௦-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூபாய் 5௦,௦௦௦ ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலையானது இன்று சவரனுக்கு ரூபாய் 160 மட்டுமே குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 2௦ பைசா அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்றாலும், அதனால் நகை வாங்குபவர்களுக்கு எந்த பயனுமில்லை. எனவே இன்னும் சற்று நன்றாக தங்கம் விலை குறையும்வரை காத்திருந்து நகைகள் வாங்குவது நல்லது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தாய்மொழி தமிழ்… மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: ஸ்டாலின் காட்டம்!
இறந்தும் டேனியல் பாலாஜி செய்த நல்ல விஷயம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதிமுகவில் இணைந்தது ஏன்? – தடா பெரியசாமி விளக்கம்!