சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 2௦) சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து, ரூ.49,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 அதிகரித்து, ரூ.6,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து, ரூ.53,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 அதிகரித்து ரூ.6,698-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெறுப்புப் பேச்சு : தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட மத்திய பாஜக அமைச்சர்!
வெள்ளியைப் பொறுத்தவரையில் 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரேயடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா குறைந்துள்ளது.
வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்குமா? இல்லை சற்றேனும் குறையுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஸ்டாலின்
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!
மாசுபட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு : மிக மோசமான நிலையில் இந்தியா!