சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 18) ரூபாய் 200 குறைந்து 48,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 குறைந்து 6,090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 216 குறைந்து 53,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 27 குறைந்து 6,644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா குறைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் குறையுமா? என்பதை நாம் சற்றே காத்திருந்து பார்க்கலாம்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப் பரவல் : பொய்யான தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின்… எடப்பாடி தாக்கு!
5வது முறை அதிபர் ஆனார் : மூன்றாம் உலகப்போருக்கு புதின் எச்சரிக்கை!