GOLD RATE: லேசாக குறைந்த விலை… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

Published On:

| By Manjula

gold rate Chennai march 15-2024

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 15) ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 49,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூபாய் 6,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 88 குறைந்து ரூபாய் 53,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 11 குறைந்து ரூபாய் 6,682-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் மாற்றம் எதுவுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,௦00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ‘யானைப்பசிக்கு சோளப்பொறி போல’ இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை விலையில் மாற்றமில்லை. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது குறையுமா? இல்லை மீண்டும் உச்சம் தொடுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“தொடங்க மனம் இருந்தால் போதும்” : மாணவர்களிடையே வாசிப்பு – புதிய செயல் திட்டம்!

மம்தா பானர்ஜி உடல்நிலை : மருத்துவமனை இயக்குநர் அதிர்ச்சி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel