சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (ஏப்ரல் 5) சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து ரூ.52,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 35 குறைந்து ரூ.6,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூபாய் 56,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 38 குறைந்து ரூ.7,102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோடைகால வெயில் போல தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது. ஆனாலும் ஏறிய அளவிற்கு விலை குறையவில்லை என்பதால், நகைகள் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.85-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மயிலாடுதுறை: போக்கு காட்டும் சிறுத்தை… தேடுதல் வேட்டையில் வனத்துறை!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பிய முக்கிய மெசேஜ்!
டிடி தொலைக்காட்சியில் ‘கேரளா ஸ்டோரி’: பினராயி விஜயன் எதிர்ப்பு!