சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 4) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம்
தினசரி உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 3) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,600-க்கும், சவரன் ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 70 காசுகள் உயர்ந்து ரூ.77.80-க்கு விற்கப்படுகிறது.
மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.700 உயர்ந்து ரூ.77,800-க்கு விற்பனையாகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
திடீரென மாறிய ட்விட்டர் லோகோ: பயனர்கள் அதிர்ச்சி!
கல்விக் கடன்: ஏழை மாணவிக்கு வசந்தம் தந்த எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்