தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By indhu

Gold and silver prices: Do you know what the situation is today?

தங்கம் விலையில் இன்று (மே 31) எந்தவித மாற்றமுமின்றி சவரன் ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (மே 30) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.6,730க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.53,840க்கு விற்பனையானது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்றும் தங்கம் விலையில் எந்தமாற்றமும் இல்லாததால் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (மே 31) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து, ரூ.100க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூரிய உதயத்தை ரசித்த மோடி… இரண்டாவது நாளாக தியானம்!

Singapore Open: 6 தொடர் தோல்விகள்… சறுக்கும் பி.வி சிந்து…!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel