இன்றைய தங்கம் விலை நிலவரத்தில் ஒரு பவுனுக்கு ரூ. 32 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை, கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 2) திடீரென தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
அதேநேரத்தில், இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. என்றாலும், ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை.
நேற்று கிராம் 5,020க்கும் ஒரு பவுன் ரூ.40,160க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ.5,016 ஆகவும் ஒரு பவுன் ரூ.40,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.
அதுபோல், ஒரு பவுனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. ஆனால் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் 71 ரூபாய்க்கும், கிலோ 71 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இன்று கிராம் ரூ.71.60க்கும் கிலோ ரூ.71 ஆயிரத்து 600க்கும் விற்பனை ஆகிறது. ஒரே நாளில் கிராம் 60 காசுகளும் கிலோ ரூ.600ம் உயர்ந்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஆணாதிக்கம் நிறைந்ததா கட்டா குஸ்தி: ஒரு பார்வை!
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை தோலுரிக்கும் விட்னஸ்: டிசம்பர் 9 ரிலீஸ்!