சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 9) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று உயர்ந்தது. இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை உயர்ந்தது நகை பிரியர்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.48,128-க்கும் ஒரு கிராம் ரூ.17 குறைந்து ரூ.6,016-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!