சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 8) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.48,264-க்கும் ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.6,033-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
ரூ.16 கோடி மோசடி… பிரபல தயாரிப்பாளர் கைது: பின்னணி என்ன?