2வது நாளாக குறைந்த தங்கம் விலை!

Published On:

| By Monisha

gold and silver price today september 22 2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 22) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த ஒரு வார காலமாக ஏறு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.48,088-க்கும் ஒரு கிராம் ரூ.22 குறைந்து ரூ.6,011-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.79,000-க்கும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ஸ்டாலின் சொல்படி கோட்டை முற்றுகை : பகுதிநேர ஆசிரியர் சங்கம்!

நெல்லை – சென்னை வந்தே பாரத்: சோதனை ஓட்டம் தொடங்கியது!