சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 13) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. குறிப்பாக தங்கத்தின் விலை மீண்டும் 44 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.47,824-க்கும் ஒரு கிராம் ரூ.43 குறைந்து ரூ.5,978-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: தமிழ்நாட்டில் எச்சரிக்கை!
சட்டென முடிந்த பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு!