சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 11) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தினசரி தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.48,128-க்கும் ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.6,016-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
’மறக்கவே முடியாது ரஹ்மான்’: இசை நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!
அப்பாவான பும்ரா: கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் வீரர்