சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 27) சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை தீபாவளி நெருக்கத்தில் அதிரடியாக உயர்ந்தது. நேற்று (அக்டோபர் 26) ஒரு சவரன் தங்கம் ரூ. 38,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையிலிருந்து இன்று (அக்டோபர் 27) ரூ.160 விலை குறைந்து ரூ. 37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 20 குறைந்து ரூ. 4,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம்
ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 41,584-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.176 விலை குறைந்து ரூ. 41,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 22 விலை குறைந்து ரூ. 5,176-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சரிந்துள்ளது. 8 கிராம் வெள்ளி நேற்று ரூ. 516-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 8 விலை குறைந்து ரூ. 508-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 63.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 63.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
ஆன்லைனில் வாங்கப்பட்டதா வெடிப்பொருட்கள்? – அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் விசாரணை!
கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?