தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 6) சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

இதுவரை இல்லாத அளவிற்குத் தங்கத்தின் விலை 46 ஆயிரத்தைக் கடந்து விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று (மே 5) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.83 குறைந்து ரூ.5,692-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 குறைந்து ரூ.49,672-க்கும் ஒரு கிராம் ரூ.91 குறைந்து ரூ.6,209-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.82,400-க்கும் ஒரு கிராம் ரூ.1.30 குறைந்து ரூ.82.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

கர்நாடகா தேர்தல்: சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜே.பி.நட்டா

RR vs GT: சஞ்சுசாம்சனால் மோசமான தோல்வியைப் பதிவு செய்த ராஜஸ்தான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel