சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 5) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரலாறு காணாத அளவில் முதன்முறையாக 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று (மே 4) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.900 அதிகரித்து ரூ.83,700-க்கும் ஒரு கிராம் 90 காசுகள் அதிகரித்து ரூ.83.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர் கலவரம்!
பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்