gold and silver price

45 ஆயிரத்திற்குக் கீழ் சென்றது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 26) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

22 கேரட்

தங்கத்தின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக விலை உயர்ந்து 46 ஆயிரத்தையே கடந்திருந்தது. இது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த நிலையில் மீண்டும் படிப்படியாக விலை குறைந்து தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்திற்குக் கீழ் சென்றுள்ளது. நேற்று (மே 25) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியும் சிறிதளவு விலை குறைந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 குறைந்து ரூ.76,200-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.76.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

முதன்முறையாக சோதனை: செந்தில் பாலாஜியை சுற்றிவளைக்கும் வருமான வரித்துறை!

முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.83 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts