சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 25) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று (மே 24) திடீரென்று விலை உயர்ந்தது. ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து 49,088-க்கும் ஒரு கிராம் ரூ.44 குறைந்து ரூ.6,136-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.76,500-க்கும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.76.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 20ஆம் தேதி திறப்பு?