சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 24) சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும் கடந்த சில தினங்களாக விலை குறைந்து வந்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை 45 ஆயிரத்திற்குக் கீழ் செல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை குறையாமல் இன்று அதிகரித்துள்ளது. நேற்று (மே 23) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு!
சிங்கப்பூர் முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!