சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
ஆபரணத் தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த மே 20 ஆம் தேதி அதிரடியாக விலை உயர்ந்தது. தொடர்ந்து நேற்று (மே 21) விலை மாற்றமில்லாமல் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து ரூ.78,600-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து ரூ.78.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
பப்புவா நியூ கினியாவில் திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர்
பெங்களூரை தோற்கடித்த குஜராத்: கிண்டல் செய்த சச்சின்