gold and silver price

2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 18) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ஆபரணத் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து 46 ஆயிரத்தைக் கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனிடையே 4 நாட்களாக விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்தது. நேற்று (மே 17) 22 கேரட் தங்கம் சவரனுக்கு 45,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.49,312-க்கும் ஒரு கிராம் ரூ.21 குறைந்து ரூ.6,164-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.78,100-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து ரூ.78.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

வலிமையான எழுத்து தான் ஒரு படத்தின் வெற்றி : இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

“போலீஸுக்கு மாமூல், அமைச்சர், எம்.எல்.ஏ ஃப்ரண்ட்ஸ்” : கள்ளச்சாராய மரண வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *