சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 13) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சிறிதளவு விலை குறைந்திருந்தது. நேற்று (மே 12) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 அதிகரித்து ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.49,880-க்கும் ஒரு கிராம் ரூ.11 அதிகரித்து ரூ.6,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.78,500-க்கும் ஒரு கிராம் ரூ.78.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
கர்நாடகா தேர்தல்: 9 மணி முன்னிலை விவரம்!
என்னை எந்த கட்சியும் தொடர்பு கொள்ளவில்லை : குமாரசாமி