சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 9) சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.41,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் 4வது நாளாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று (மார்ச் 8) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.41,296-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.56 குறைந்து ரூ.41,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7 குறைந்து ரூ.5,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.45,000-க்கும் ஒரு கிராம் ரூ.7 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.100 குறைந்து ரூ.67,400-க்கும் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் விலை குறைந்து ரூ.67.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
சூரியின் விடுதலை : ட்ரெய்லர் எப்படி?
முடங்கிய இன்ஸ்டாகிராம்: பதிலளிக்காத மெட்டா!