gold and silver price

மீண்டும் 44 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 22) அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 விலை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை 44 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.ரூ.560 அதிகரித்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து ரூ.5,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ரூ.48,344-க்கும் ஒரு கிராம் ரூ.76 அதிகரித்து ரூ.6,043-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,400 அதிகரித்து ரூ.75,400-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 அதிகரித்து ரூ.75.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

அண்ணாமலை அவசர டெல்லி பயணம்!

தமிழாக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள்: தமிழ்நாடு அரசாங்கத்தின் போற்றத்தக்க திட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0