சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 22) சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்து 44 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று (மார்ச் 22) ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று (மார்ச் 21) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.5,470-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.47,736-க்கும் ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.5,967-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.74,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 74 காசுகள் குறைந்து ரூ.74-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா