சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 18) சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தினசரி அதிகரித்து வந்த தங்கம் விலை விரைவில் 44 ஆயிரத்தைக் கடக்கும் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை 44 ஆயிரத்தைக் கடந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மார்ச் 17) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.110 அதிகரித்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.48,520-க்கும் ஒரு கிராம் ரூ.120 அதிகரித்து ரூ.6,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் அதிரடியாய் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 அதிகரித்து ரூ.74,400-க்கும் ஒரு கிராம் ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!