அதிரடியாய் உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த மாதம் 44 ஆயிரத்தை நெருங்கவிருந்த தங்கம் விலை குறையத் தொடங்கி 41 ஆயிரத்தில் இருந்தது. இந்நிலையில் தங்கம் விலை அதிரடியாய் உயரத் தொடங்கி 44 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. நேற்று (மார்ச் 16) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.5,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.47,560-க்கும் ஒரு கிராம் ரூ.27 அதிகரித்து ரூ.5,945-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் சேர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.73,100-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் அதிகரித்து ரூ.73.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
பத்மாவதி தாயார் கும்பாபிஷேகம் கோலாகலம்!
திரவுபதி முர்மு வருகை: குமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை!