gold and silver price today

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் இன்று (ஜூன் 6) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும் இல்லாமல் இறங்கு முகமாகவும் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலையும் அதிகரித்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டது அரிசிக் கொம்பன்

எடப்பாடிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0