gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 28) சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே குறைந்து வந்து 44 ஆயிரத்திற்குக் கீழ் விற்பனையானது. ஆனால் தொடர்ந்து 2 நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கி நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 குறைந்து ரூ.5,446-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.75,700-க்கும் ஒரு கிராம் ரூ.75.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!

திமுகவிற்கு வாக்களித்தால்… எச்சரித்த மோடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *