சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 27) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை அதிகரித்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.75,700-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.75.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில் சேவைகள்!