சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 22) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் கணிசமான சரிவை சந்தித்து வந்து கொண்டிருந்தது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக விலை குறைந்து வருகிறது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் விலை 44 ஆயிரத்திற்குக் கீழ் செல்லுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள வேளையில் வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 குறைந்து ரூ.75,000-க்கும் ஒரு கிராம் ரூ.1.50 குறைந்து ரூ.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா