சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 20) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனிடையே ஒரு சில நாட்களில் விலை மாற்றமில்லாமலும் தங்கம் விற்பனையானது. நேற்று (ஜூன் 19) விலை மாற்றமில்லாமல் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து ரூ.78,600-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து ரூ.78.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது?: அமைச்சர் பதில்!