சென்னையில் இன்று (ஜூன் 19) ஆபரணத் தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலமாகவே தொடர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மே மாத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 46 ஆயிரத்தைக் கடந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருந்தது.
ஆனால் அதன்பின்னர் சற்றே விலை குறைந்து வருகிறது. ஜூன் 17 ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 2வது நாளாக விலையில் மாற்றமில்லாமல் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படும் நிலையில் வெள்ளி விலை அதிகரித்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.79,000-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா