gold and silver price

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 10) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.280 அதிகரித்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,800-க்கும் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.79,800-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் அதிகரித்து ரூ.79.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சேலத்தில் 3 நாட்கள் முகாமிடும் முதல்வர் ஸ்டாலின்: பயண விபரம்!

’நாயகன் மீண்டும் வரார்’: ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *