சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 4) சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.43,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
அதன்படி, இன்று(ஜூலை 4) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து 5,452 ரூபாய் -க்கும் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து 4,466 ரூபாய் -க்கும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. 35,728 -க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.75.80-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்