தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 29) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.48,568-க்கும் ஒரு கிராம் ரூ.16 அதிகரித்து ரூ.6,071-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையும் வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
கைதான பாமகவினருக்கு 15 நாள் காவல்: மீண்டும் கால்வாய் வெட்டும் என்.எல்.சி!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது!