மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 13) சவரனுக்கு ரூ.296 அதிகரித்து ரூ.44,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை இறங்கு முகமாக இருந்த வந்தது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் திடீரென மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கிவிட்டது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.296 அதிகரித்து ரூ.44,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,500 அதிகரித்து ரூ.79,5000-க்கும் ஒரு கிராம் ரூ.2.50 அதிகரித்து ரூ.79.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
தென்காசியில் தபால் ஓட்டு மறு எண்ணிக்கை தொடங்கியது!
விண்ணில் பாயவுள்ள சந்திரயான் 3: என்ன ஸ்பெஷல்?