சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
நகைப்பிரியர்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு பின்னர் குறையத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே 44 ஆயிரத்திற்குக் கீழ் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.18 அதிகரித்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
திமுக எம். எல். ஏ. வைக் குறிவைத்து பெட்ரோல் வெடிகுண்டா? உண்மை ரிப்போர்ட் இதோ!
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!