சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள வேளையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.76,800-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் அதிகரித்து ரூ.76.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
15 மீனவர்கள் கைது: நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்!
கனடா ஓபன்: லக்ஷயா சென் சாம்பியன்!