சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 28) ஒரு சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 குறைந்து ரூ.5,81௦-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 48 குறைந்து ரூ.50,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 6 குறைந்து ஒரு கிராம் ரூ.6338-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.10 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 75.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 75,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தினை பொறுத்தவரை நேற்று (பிப்ரவரி 27) ஏறிய விலை மட்டுமே இன்று குறைந்துள்ளது.
இதனால் தங்கம் வாங்குபவர்கள் விலை இன்னும் குறையும்வரையில் சற்று காத்திருந்து தேவைப்படும் நகைகளை வாங்கலாம். அதே நேரம் வெள்ளி விலை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவதால் வெள்ளி நகை வாங்குபவர்கள் இந்த வாய்ப்பினை தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!