சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 27) ஒரு சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 அதிகரித்து ரூ.5,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 48 அதிகரித்து ரூ.50,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6344-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.90 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 75.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமிற்கு 0.90 பைசா குறைந்துள்ள நிலையில் தங்கமானது சிறிது விலை உயர்ந்துள்ளது. இது படிப்படியாக அதிகரிக்குமா? இல்லை தங்கத்தின் விலை குறையக்கூடுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வெள்ளி வாங்க நினைப்பவர்கள் இந்த விலை இறக்கத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல தங்கத்தின் விலையும் பெரிதாக உயரவில்லை என்பதால், தங்கம் வாங்கிட நினைப்பவர்களும் தயங்காமல் வாங்கிடலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அடுத்த தோனி”: இளம் வீரருக்கு குவியும் ஜாம்பவான்களின் வாழ்த்து!